இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 விதம் வருடத்திற்கு 6000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் 11வது தவணை பெற்றுள்ள நிலையில் 12வது தவணைக்கான நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அடுத்த மாதத்தில் 12வது தவணை பணம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இந்த திட்டத்தில் நிதி உதவி பெறுவதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் கட்டாயமாக விவசாயிகள் தங்களுடைய ஆதார் கார்டு இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் மட்டுமே 12 வது தவணைக்கான பணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.