Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் கொலை…. 11 பேர் கைது…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னை திருவல்லிக்கேணி கற்பககன்னி அம்மன் கோயில் 3வது தெருவில் ஆட்டோடிரைவர் ராஜா(49) வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இவர் தான் நடத்தி வந்த டிபன் கடையில் இருந்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கொலையான ராஜா மாட்டாங்குப்பத்தில் பிரபல ரவுடிகளான வினோத், பாலாஜி போன்றோரின் தாய்மாமன் ஆவார். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் ஜாம்பஜார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையில் ராஜாவை கொலை செய்த ரவுடிகள் சூர்யா, அவரது சகோதரர் தேவா, வைத்தியநாதன், விக்னேஷ், பாண்டியன் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ராஜாவின் மருமகன்களில் ஒருவரான வினோத் தற்போது சிறையில் இருக்கிறார். இதனால் அவர் செய்த கஞ்சா விற்பனையை அவரது தாய்மாமனான ராஜா செய்து வந்தார். இந்நிலையில் ஏற்பட்ட தொழில் போட்டியால் சூர்யா தரப்பினர் ராஜாவை கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |