ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷியா, சன்னி பிரிவினர் இடையில் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபூலிலுள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று பெரும்பாலானோர் வழக்கமான தொழுகைக்காக குவிந்தனர். இந்நிலையில் மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 30க்கும் அதிகமானோர் உடல் சிதறி பலியாகினர்.
அத்துடன் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குண்டு வெடிப்புக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கையானது அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.