Categories
உலக செய்திகள்

கோபத்தில் பாம்பை கடித்துக் கொன்ற சிறுமி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம்…. பிரபல நாட்டில் விசித்திரம்…..!!

துருக்கி நாட்டில் கந்தர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில்  ஆகஸ்டு 10-ஆம் தேதி சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் வந்து பார்த்த போது இரண்டு வயதுடைய சிறுமியின் வாயில் அரை மீட்டர் நீளமுள்ள பாம்பு ஒன்றை கவ்வி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சிறுமியின் கீழ் உதட்டில் பாம்பு தீண்டிய அடையாளமும் இருந்தது. இதனை அடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகாமையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உரிய சிகிச்சைக்கு பின்னர் சிறுமி காப்பாற்றப்பட்டதாகவும், அவரது உடல்நிலை தேறி வருவதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கூறியதாவது, “தம்மை தீண்டிய பாம்பை சிறுமி கோபத்தில் கடித்து துப்பியதாகவே கூறப்படுகின்றது. இதில் பாம்பு இறந்துள்ளது. சிறுமி வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்புடன் விளையாட்டில் ஈடுபட்ட  அந்த சிறுமியின் கீழ் உதட்டை அது கவ்வியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுமி, பாம்பை திருப்பி கடித்துள்ளார் என்றே தெரிய வந்துள்ளது. அச்சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை, அருகாமையிலேயே பணியில் ஈடுபட்டிருந்தார்” என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் துருக்கியில் மொத்தம் 45 வகையான பாம்புகள் காணப்படுகின்றது. இதில் 12 வகை பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |