இரட்டைத் தலைமை என்பதில் பிரச்சனை இல்லை; கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். எடப்பாடி பழனிச்சாமியை அன்பு சகோதரர் என பலமுறை கூறி அழைப்பு விடுத்தார்.அதிமுக நலனுக்காக ஒன்றிணைய வருமாறு அழைப்பு கொடுத்தார். எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவிற்கு சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
மனக்கசப்பு எல்லாம் மறந்து மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு தேர்தல் மூலம் ஈபிஎஸ், நானும் அதிமுக நிர்வாகிகளாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம். கசப்புகளை தூக்கி எறிந்து விட்டு வாருங்கள். எங்களுடைய எண்ணம், இணைப்பு இணைப்புதான் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.