நடனமாடிய காவலர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புரான்பூரில் உள்ள காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் சவுரவ் குமார் மற்றும் அனுஜ் ஆகிய காவலர்கள் நடனம் ஆகியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதால் டிஎஸ்பி தினேஷ்குமார் காவலர்கள் சவுரப் குமார் மற்றும் அனுஜ் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, நடனமாடியது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.