Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு….. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் போட்டி தேர்வுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நிலையில் தற்போது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு இன்று முதல் இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது.

சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவர் ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை அறிய 9361566648, 8072584856 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |