Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய ஓட்டல் உரிமையாளர்….. போலீசார் அதிரடி….!!!!

பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வரும் ரயில்களில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் மணிகண்டன்(49) என்பதும், பெங்களூரில் இருந்து 13 மதுபானம் பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |