Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற மாணவ-மாணவிகளுக்கு சுற்றுலா…. எதற்காக தெரியுமா?….. சுடர் தொண்டு அமைப்பு அதிரடி….!!!!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, கடம்பூர் மலை மற்றும் தாளவாடி மலை கிராமங்களில் கல்வி சேவை செய்யும் அமைப்பாக சுடர் தொண்டு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் நடராஜ் மற்றும் கூடுதல் இயக்குனர் தீரா தேன்மொழி ஆகியோர் மலை கிராமங்களை சேர்ந்த 40 மாணவ- மாணவிகளை சென்னைக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பி உள்ளனர். இது குறித்து சுடர் தொண்டு அமைப்பு நிறுவனர் எஸ்.சி. நடராஜ் கூறியது, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து வகை பள்ளிக்கூடங்களும் அடைக்கப்பட்டபோது மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, பள்ளிக்கூடம் திறந்தபோது பல மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவில்லை. கரும்பு வெட்டும் கூலித்தொழில் உள்ளிட்ட பல்வேறு கூலித்தொழில்களுக்கு சென்று பழக்கப்பட்டு விட்டனர். அதனைதொடர்ந்து இல்லம்தேடி கல்வி  பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டாலும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு திரும்ப வரவில்லை.

இந்நிலையில் சுடர் தொண்டு நிறுவனத்தின் சிறப்பு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது. இங்கு படித்த மாணவ-மாணவிகளின் பெயர்கள் அனைத்தும் அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டது. அதனால் அந்த மாணவ-மாணவிகளின் நிலை குறித்து அறிய ஒரு ஆய்வு மேற்கொண்டோம். அந்த  ஆய்வில், எங்கள் குழந்தைகள் மட்டுமில்லாமல், இன்னும் ஏராளமானவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைகளுக்கு சென்று வருவது தெரிய வந்தது. எனவே அவர்களுக்கு கல்வி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த கூடிய வகையில் கல்வி சுற்றுலா அழைத்துச்செல்ல முடிவு செய்தோம். அதன்படி பர்கூர், ஊசிமலை, துர்சனாம்பாளையம், தாமரைக்கரை, கொங்காடை, பெரியகுன்றி, இந்திராநகர் கிராமங்களை சேர்ந்த 23 மாணவர்கள், 17 மாணவிகள் என 40 பேரை மீட்டோம். அதன்பிறகு 4 நாட்கள் சுற்றுலாவாக சென்னை விமானநிலையம், மெட்ரோ ரெயில், பிர்லா கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்கா, அருங்காட்சியகம், மெரினா கடற்கரை அழைத்துச்சென்றோம். இப்போது மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதாக உறுதி அளித்து உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |