கஞ்சா வாங்கிவிட்டு பணம் கொடுக்காத காரணத்தினால் மொபைலை பறித்துக்கொண்டனர்.
கீழ்ப்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக பணிபுரியும் இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்து வந்துள்ளது. சில மாதங்களாக அண்ணாநகரில் கஞ்சா வாங்கி உபயோகப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ஸ்கைவாக் பாலத்தின் அருகில் வாட்சாவிடம் தனது நண்பரான விக்கி உடன் சென்று கார்த்திக் கஞ்சா வாங்கிய பின்னர் பணம் கொடுக்கவில்லை என தகவல் உள்ளது. பணம் கொடுக்காத கார்த்திக்கிடம் அவரது செல்போனை கஞ்சா விற்பனை செய்ய வந்த வாட்சா பறித்துக்கொண்டார் இதனைத் தொடர்ந்து அமைந்தகரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.