பயங்கர தாக்குதலில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் குர்து இன போராளிகள் இருக்கின்றனர். இவர்களை துருக்கி அரசு தீவிரவாதிகளாக கருதுகின்றனர். இந்த தீவிரவாதிகள் மீது துருக்கி அரசு அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வருவது வழக்கம். இந்த தாக்குதலை தடுப்பதற்காக சிரியா நாட்டின் அரசு பாதுகாப்பு படை அதிகாரிகள் குர்து இன போராளிகள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருப்பார்கள். இந்நிலையில் கோபனே பகுதியில் துருக்கி ராணுவத்தினர் நேற்று வான் தாக்குதல் நடத்தினர்.
இந்த சிரியாவை சேர்ந்த 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு துருக்கி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1 ராணுவ வீரர் பலியானதாகவும், 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.