Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி” சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால் நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு 3 அடியில் இருந்து 10 அடி வரையிலான பிள்ளையார் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், எங்களுக்குபிள்ளையார் சிலை தயாரிப்பதை விட வேறு எதுவும் தொழில் தெரியாததால், கடந்த 2 வருடங்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளானோம். இதன் காரணமாக விநாயகர் சிலைகளை நடப்பாண்டில் முன்கூட்டியே விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |