மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் “லூசிபர்”. இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இவற்றில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய பல படங்களை இயக்கிய மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இந்த நிலையில் “லூசிபர்” படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு “எம்புரான்” என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதை படக்குழுவானது வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்பின் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#L2E EMPURAAN. The journey begins. 🙂🙏 https://t.co/9phSeMGtqV@Mohanlal #MuraliGopy @antonypbvr @aashirvadcine pic.twitter.com/yQEV1uo0cR
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) August 17, 2022