கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்பிற்குள்ளான பல்வேறு விஷயங்களில் மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
ஜப்பான் நாட்டில் கொரோனா பேரிடர் காலத்தில் தற்கொலைகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது 2020 மார்ச் மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஜப்பானில் 800-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து கடந்த கால தற்கொலை நிலவரங்களைக் கொண்டு ஒப்பிடுகையில், ” இந்த நிலவரம் கடும் அதிகரிப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேரிடர் காலத்தில் மட்டும் 8088 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக 20 வயது பெண்களே அதிகம் என்று கூறப்படுகின்றது. பெண்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும் அதைவிட வயது குறைவான பெண்களும் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் புள்ளிவிவரம் கூறும் தகவலாக அமைந்துள்ளது. 20 வயதுடையவர்கள் 1837 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 1092 பேர் பெண்கள். 19 வயதுடைய 282 பேரும், அதைவிட குறைவானவர்கள் 377 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.