Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்களுடைய மிகப்பெரிய பலமே எங்கள் வீட்டு பெண்கள் தான்…. விருமன் பட விழாவில் நடிகர் சூர்யா நெகழ்ச்சி கருத்து….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க கருணாஸ், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான விருமன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெற்றி அடைந்ததால் விருமன் படக்குழு ஒரு பார்ட்டி கொடுத்துள்ளனர். இந்த பார்ட்டியில் நடிகர் சூர்யா, கார்த்திக், பிரகாஷ்ராஜ், இயக்குனர் முத்தையா, நடிகை அதிதி சங்கர் உட்பட பலர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் நடிகர் சூர்யா பேசியதாவது, எங்களுக்கு மிகப்பெரிய பலம் எங்கள் வீட்டு பெண்கள்தான் என்றார். அவர்கள் மிகப்பெரிய தியாகம் செய்கிறார்கள். ஒரு ஆனால் இங்கே வெற்றி பெறுவது எளியது. ஆனால் ஒரு பெண் வெற்றி பெறுவதற்கு 10 மடங்கு போராட வேண்டும். ஒரு வீட்டில் இருக்கும் ஆண்மகனை முன்னாள் நிறுத்தி பெண்கள் பின்னால் நிற்கின்றனர். என்னோட தங்கச்சி இப்ப சொன்னது எனக்கு ஞாபகம் வருது. அதாவது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் எதுனா, நாங்க சாப்பிட்ட தட்டை இன்னொருத்தங்க கழுவுறது தான் என்றார். மேலும் ஒவ்வொரு பெண்களை முன்னிறுத்தி அவர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Categories

Tech |