தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அவன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை,தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஆந்திர கடலோரம்,குமரிக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.