இன்றைய பஞ்சாங்கம்
13-02-2020, மாசி 01, வியாழக்கிழமை,
பஞ்சமி இரவு 08.46 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.
அஸ்தம் நட்சத்திரம் காலை 09.25 வரை பின்பு சித்திரை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷம்
இன்று தொழிலில் பங்குதாரர்களுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமில்லாமல் கிடைக்கப்பெறும். பணியில் இருப்பவர்களுக்கு தகுதிக்கு ஏற்றார்போல் பதவி உயர்வு கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
இன்று இல்லத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான பயணங்களால் நன்மை நடக்கும். உறவினர்கள் இன்று உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று பிள்ளைகளின் வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மாற்றுக்கருத்துக்கள் மூலம் மன அமைதி குறையும். தொழில் தொடர்பான வழக்குகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றி அடையலாம். வெளியில் இருந்து வரவேண்டிய பணம் சரியாக வந்தடையும்.
கடகம்
இன்று அனைத்து காரியத்தையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். தொழிலில் கொடுக்கல் வாங்கல் நல்ல முறையில் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். இல்லத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று ஆனந்தமான சூழல் உருவாகும். பணியில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று வெளியூர் செல்வதால் பெரியவர்களின் நட்பு கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சி இன்று வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் இன்று நட்புடன் செயல்படுவார்கள். பணவரவு சிறந்த அளவில் இருக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும்.
கன்னி
இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பிள்ளைகளின் உதவி கிடைக்கும். பணியில் ஒருசிலருக்கு புதிதாய் பொறுப்புகள் வந்தடையும். விலையுயர்ந்த பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
துலாம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் மந்தமும் சோர்வும் காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் இடையே ஒற்றுமை குறையும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை நடக்கும். இன்று எதிர்பாராத உதவிகள் கிடைத்து மனவருத்தங்கள் அகலும்.
விருச்சிகம்
இன்று பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும். இல்லத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். தொழில் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும். உடல் நலம் சிறந்த முறையில் இருக்கும். கடன் பிரச்சினைகள் அகலும்.
தனுசு
இன்று இல்லத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த மனவருத்தம் அகலும். புதிதாய் நட்பு வட்டம் விரிவடையும். அலுவலகத்தில் உடன் இருப்பவர்களால் நல்ல பலன்கிடைக்கும். கடன் பிரச்சனைகள் அகலும். இன்று பொன் பொருள் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் கொள்வீர்கள்.
மகரம்
இன்று உடல்நலத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடியினால் இல்லத்தில் தேவையற்ற பிரச்சனைகள் இருக்கும். உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனையினால் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். தெய்வீக வழிபாடு நன்மையைக் கொடுக்கும்.
கும்பம்
இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தினால் டென்ஷன் அலைச்சல் உருவாகும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது கவனத்துடன் செல்வது மிகவும் நல்லது. மற்றவர்களின் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது சிறப்பு. எதிலும் இன்று எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
மீனம்
இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். பொருள் சேர்வதால் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதால் மன அமைதி அதிகரிக்கும்.