அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என கூறப்படும் நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவை செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன் மூலம் எடப்பாடிக்கு வழங்கப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாமல் போனது. அதே நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே பொதுக்குழு நடத்தலாம் என்றும் அதில் ஓபிஎஸ் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சேலம், எடப்பாடி, ஓமலூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்தித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான எடப்பாடி ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தான் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கோடிக்கணக்கான தொண்டர்கள் தங்களுக்கு கிடைத்த தீர்ப்பாகவே எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நிர்வாகிகளை குத்தகைக்கு எடுப்பது போல் விலைக்கு வாங்கி பொதுக்குழு நடத்தி வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. பொதுக்குழு நடத்தி எப்போது பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவிற்கு தான் என்றும் அந்த பதவி யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால் அந்த விதியை மாற்றித் தானே பொதுச் செயலாளராக வேண்டும் என்ற ஆசையில் நிர்வாகிகளை விலைக்கி வாங்கி பொதுக்குழு நடத்தினார். அவரது இந்த செயலை கோடிக்கணக்கான தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விரைவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் வட்டம் பெரிதாக தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. முதலில் சேலம் ஓபிஎஸ் வசப்படும். அடுத்த பொதுக்குழுவிர்க்குள் ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தையும் வசப்படுத்த வியூகம் வகுத்து செயல்படுவோம் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.