Categories
மாநில செய்திகள்

இன்னும் கடனுதவி கிடைக்கல!…. நரிக்குறவ பெண்மணி குற்றச்சாட்டு…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

“அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க” என்ற கேள்வியெழுப்பி அனைவரின் கவனத்தையும் பெற்ற நரிக்குறவ பெண்மணி அஸ்வினியின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரையிலும் முடிவுவரவில்லை. சமூகவலைதளம் வாயிலாக தனக்கு ஏற்பட்ட அநீதி பற்றி, மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற நரிக்குறவர் இன பெண் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரலாகியது. இதையடுத்து சென்ற வருடம் தீபாவளி அன்று தமிழக முதலவர் அந்த பகுதிக்கு சென்று பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனிடையில் கடன் உதவி கொடுக்கப்பட்டிருந்தும் கடையில்லை உள்ளிட்ட காரணங்களைகூறி தொடர்ந்து தங்களுக்கு வங்கியிலிருந்து கடனுதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அஸ்வினி முன்வைத்துள்ளார். தங்களுக்கு கடை எடுத்து தர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை மனு கொடுத்து இருப்பதாகவும் அஸ்வினி தெரிவித்துள்ளார். இதுபற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் போன்றோரை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் தங்களுக்கு கடை வாங்கிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பழங்குடியின பெண் அஸ்வினி குற்றச்சாட்டை பதிவுசெய்துள்ளார். சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வரும் மகாபலிபுரம் முழுதும் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் தங்களுக்கென ஒரு கடையும் இல்லை. இதற்கிடையில் வங்கியில் சேர்ந்து லோன் கேட்டால் லோன் கொடுப்பது கிடையாது. கழிவறை கட்ட கொண்டு வரப்பட்ட செங்கலைகூட எடுத்து சென்றுவிட்டார்கள் என ஆதங்கத்துடன் அஸ்வினி தெரிவித்தார்.

கடந்த வருடம் தீபாவளி நாளன்று வங்கி கடனுதவி, அங்கன்வாடி வகுப்பறைகள் கட்டும் ஆணைகளை 33 நபர்களுக்கு சிறு தொழில் தொடங்குவதற்காக தலா ரூபாய்.10,000 வீதம் ரூ.3.30 லட்சம் வழங்கப்பட்டது. அத்துடன் 12 நபர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாய் கடனுதவியை முதல்வர் வழங்கினார். மேலும் 6 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 21 பேருக்கு குடும்ப அட்டை, 88 பேருக்கு சாதிக்சான்றிதழ்களையும் அப்போது முதல்வர் வழங்கினார். பின் 34 பேருக்கு நரிக்குறவர் நலவாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளையும் முதல்வர் வழங்கினார்.

Categories

Tech |