Categories
மாநில செய்திகள்

“சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும்”…. ஓபிஎஸ் விருப்பம்….!!!!

சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது :  “சின்ன சின்ன பிரச்சனைகள் காரணமாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையால் தான் திமுக ஆளுகின்ற கட்சியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி உள்ளது. இந்த நேரத்தில் எம்ஜிஆரின் தம்பிகளாக அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து வந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தலைவர் காலத்தில் தலைவரோடு உடனிருந்து இன்று இயக்கத்துக்கு பாடுபட்டவர்கள், இந்த இயக்கத்தை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், அம்மாவின் காலத்தில் இந்த இயக்கத்துக்கு பலமாக தூணாக இருந்து உழைத்தவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக் கொண்டு கழகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |