Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விஷம் கலந்த அரிசி….. 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை….. திருவாரூர் அருகே சோகம்….!!

திருவாரூர் அருகே விசம் கலந்த  அரிசியை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த குறிச்சி கிராமத்தில் வசித்து வரும் விஸ்வநாதன் என்பவரது இரண்டு மகன்களான ஜஸ்வந்த், கிஷோர்  ஆகியோரும் அதே பகுதியில் வசித்து வரும் செந்தில்ராஜ் என்பவரது மகனான குமரராஜ் என்பவர் உள்ளிட்டோர் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்றையதினம் மூவரும் பள்ளிக்கு செல்லாமல் அவர்களது பக்கத்து வீடான பாசமலர் என்பவரது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போதே அவர் வேலைக்கு சென்ற நிலையில் அங்கிருந்த அரிசியை மூன்று குழந்தைகளும் எடுத்துச் சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு பாசமலர் திரும்பி வந்து பார்த்தபோது பாத்திரங்கள் கலைந்து கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார். பின் எலியை கொள்வதற்காக எலி மருந்து கலந்து வைத்திருந்த அரிசியை சோதனையிட்டபோது சிறுவர்கள் மறந்து சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் விசாரித்தார்.

இதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் மூவரையும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இது குறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |