Categories
தேசிய செய்திகள்

“ம.பி.யில் காணாமல் போன கேப்டனின் உடல்”…. 3 நாட்களுக்கு பின்….. பெரும் அதிர்ச்சி….!!!!

மத்திய பிரதேசத்தில் காணாமல் போன மலையாளி கேப்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இருந்து தனது பணியிடமான பச்மாரிக்கு திரும்பியபோது காணாமல் போன மலையாளி ராணுவ வீரர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாமங்கலத்தைச் சேர்ந்த கேப்டன் நிர்மல் சிவராஜன் உயிரிழந்தார். அவரது சடலம் வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. கார் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஜபல்பூரில் உள்ள தனது மனைவியைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாக வீட்டிற்குத் தகவல் கிடைத்தது. பணியிடத்திற்கு செல்ல 85 கி.மீ., தூரம் உள்ளதாகவும், மழையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நிர்மல் குடும்பத்தினரிடம் கூறினார். காரின் ஜிபிஎஸ் சிக்னலை கொண்டு தேடுதல் பணி நடந்த நிலையில், 3 நாட்களுக்கு பிறகு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |