Categories
விளையாட்டு

“சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி”…. பங்கேற்கும் முன்னணி வீராங்கனைகள்…!!!!

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ்போட்டி முதன் முறையாக நடத்தப்படுகிறது. இப்போட்டி செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு முன்னணி வீராங்கனைகளின் பட்டியலை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஒற்றையர் பிரிவில் மொத்தம் 32 வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

உலகத் தரவரிசையில் 29வது இடத்திலுள்ள அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் (33வது இடம்), பிரான்சின் கரோலின் கார்சியா (35), ரஷியாவின் வார்வரா கிராச்சேவா (60), போலந்தின் மேக்டா லினெட் (70), சுவீடனின் ரெபேக்கா பீட்டர்சன் (87), ஜெர்மனியின் தட்ஜானா மரியா (93), சீனாவின் கியாங் வாங் (103), பிரான்சின் கிளோ பாகுட் (111),கனடாவின் ரெபேக்கா மரினோ (113), ஜப்பானின் மோயுகா உச்சிமா (131), ரஷ்யாவின் ஒசானா செலக்மேதவா (145), அனா பிளின்கோவா (151), அனஸ்டசியா கசநோவா (156), செக்குடியரசின் லிண்டா ப்ருஹ்விர்டோவா (157), போலந்தின் கதர்சினா காவா (160), பெல்ஜியத்தின் யானினா விக்மேயர் (162), அன்டோராவின் விக்டோரியா ஜிமினெஸ் (165), நெதர்லாந்தின் அரியன்னே ஹார்டோனோ (166), சுவிட்சர்லாந்தின் ஜோன் ஜுகர் (167), பிரிட்டனின் கேட்டி ஸ்வான் (177) போன்றோர் சென்னை ஓபனில் ஆடுகிறார்கள்.

இவர்களில் பெல்ஜியத்தின் எலிஸ்மெர்டன்ஸ், 2018-ம் வருடம் ஆஸ்திரேலிய ஓபனில் அரை இறுதிவரை முன்னேறி இருந்தார். ஸ்பெயின் நாட்டின் கரோலின் கார்சியா 2017 மற்றும் 2022ல் பிரெஞ்சு ஓபனில் கால் இறுதிவரை கால் பதித்திருந்தார். ஜெர்மனியை சேர்ந்த தட்ஜானா மரியா 2 குழந்தைகளுக்கு தாயான சூழ்நிலையில், இத்தொடரில் பங்கேற்கிறார். செக்குடியரசை சேர்ந்த 15 வயதான லிண்டா அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியவர் ஆவார். ஏனென்றால் ஸ்பெயினின் நடால் தன் 16 வயதில் சென்னை ஓபனில் பங்கேற்று விளையாடி இருந்தார்.

Categories

Tech |