Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி மேற்கொண்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ரயில் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆனைப்பாலம் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பது தெரியவந்தது.

இவர் குமரி மாவட்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று மாலை வழக்கம் போல சந்திரசேகர் ஆனைப்பாலம் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். பின்னர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி சந்திரசேகர் உயிரிழந்தது தெரியவந்தது.

Categories

Tech |