தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் ராசி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
சென்னை ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் படம் பார்த்து அவர் படம் முடிந்தபின் உடனடியாக தியேட்டரின் பின்புற வாசல் வழியாக நடிகை ராசி கண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேகவேகமாக வெளியேறி காரில் ஏற முற்பட்டார். அங்கிருந்து எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.