சென்னையின் வரலாறு:
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. இந்த நகரம் முதன் முதலில் மதராஸ் என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவினுடைய நான்காவது மிகப்பெரிய நகரமாகும். இது வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. இது 400 வருடங்கள் மிகப் பழமையான நகரம் ஆகும்.
இது உலகிலேயே 31 வது பெரிய பெருநகர பகுதி என்று அழைக்கப்படுகிறது. கூவம் ஆறானது வங்கக்கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த மதராசபட்டினம் கிராமத்தை கிழக்கிந்திய கம்பெனி 1639இல் விலைக்கு வாங்கியது. இதன் பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர். மெட்ராஸ் என்ற பெயரும் சென்னை என்ற பெயரும் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என என்ற இரண்டு ஊர்களின் பெயர்களில் இருந்து தான் தோன்றியதாக கூறப்படுகிறது. சென்னப்பட்டினம், மதராஸ் பட்டினம் என்று இரண்டு கிராமங்கள் இருந்துள்ளது. இந்த இரண்டு ஊர்களுடைய இணைப்பில் உருவான நிலப்பரப்பு தான் தற்காலத்தில் சென்னை என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் விடுதலைக்கு பிறகு தெலுங்கர்கள் தங்களுக்கென்று தனி மாநிலம் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேரு அவர்கள் ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் மாநிலத்திற்கு தலைநகர் எது என்று அறிவிக்கவில்லை. இதை வாய்ப்பாக கொண்ட தெலுங்கர்கள் மதராஸ் மனதே என்றும் முழக்கம் செய்தார்கள். இதனையடுத்து சென்னை இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருக்க வேண்டும், மத்திய அரசின் ஒன்றிய பிரதேசமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இதற்கு தமிழர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் உண்டானதையடுத்து சென்னை மாநகராட்சியின் சிறப்பு கூட்டத்தில் 1953 ஆம் வருடம் சென்னை தமிழகத்திற்கு உரித்தானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1953 இல் உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகராக கார்நூல் அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னை தமிழ்நாட்டிற்கு தக்கவைக்கப்பட்டது. மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரான மு கருணாநிதி அவர்களால் மெட்ராஸ் என்ற பெயரானது சென்னை என்று மாற்றப்பட்டது.
பாரம்பரியம்:
சென்னைக்கு பல்வேறு பாரம்பரியங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்றான ரயில்வே தலைமையகம் குறித்து பார்க்கலாம். சென்னைக்கு வரும் பலரும் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கி இருப்பார்கள். ஆனால் அங்குள்ள ரயில்களும், ரயில் நிலையங்களும் இயங்க காரணமாக இருப்பதே தெற்கு ரயில்வே தலைமையகம் தான். ரயில்வே தண்டவாளங்களில் ஓடும் ரயில்கள் மட்டும் நூறு ஆண்டுகள் கடந்து விடவில்லை அந்த ரயில்களை இயக்க காரணமாக உள்ள தெற்கு ரயில்வே தலைமையக கட்டிடமும் 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த கட்டிடத்தை அறிந்திருக்க மக்களுக்கு வாய்ப்பில்லை. இந்த கட்டடம் சென்னையின் முக்கிய பழமையான வால்டர் சாலை ஓட்டி கம்பீரமாக இன்றும் காட்சியளிக்கிறது.
இந்த கட்டிடத்தில் நூல் 1200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த கட்டடம் தற்போது நூறு ஆண்டுகளையும் தாண்டி பதிவு செய்து பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கிறது. இது பெங்களூரில் இது பெங்களூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் டி.சாமிநாதபிள்ளை என்பவரால் கட்டப்பட்டது. தரைமட்டத்திலிருந்து ஐந்து முதல் எட்டு அடி வரை வலுவான காங்கிரீட்டை கொண்டுள்ளது. சுமார் 20 அடி ஆழத்தில் தூயமணல் அடுக்கு அமைக்கப்பட்டது. இந்த கட்டடம் போர்பந்தர் கற்கள் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டன.
இந்த கற்கள் அனைத்தும் எட்டு வருடங்களாக கடல் வழியாக கேரளத்துக்கும் பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கும் கொண்டுவரப்பட்டன.இந்த கட்டிடமானது பாரம்பரிய வடிவமைப்பு என்று அறிவிக்கப்பட்டதால் மத்திய அரசு வழங்கிய நெறிமுறைகளின் படி இது பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.