இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும் தமிழகத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது சென்னை. நவீன பாரம்பரியம் அனைத்தும் கலந்து பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாச்சாரம் திகழ்ந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள சுற்றுலா தளங்கள் பற்றி பலரும் அறிந்திருப்போம். அனைவரும் கண்டு களைக்கும் வகையில் அவ்வளவு கலாச்சாரம் மிகுந்த சுற்றுலா இடங்கள் சென்னையில் அதிகம் உள்ளன. அவ்வாறு சென்னையில் பிரபலமான கலாச்சார சுற்றுலா இடங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
புனித ஜார்ஜ் கோட்டை:
இந்தியாவில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை தான் புனித ஜார்ஜ் கோட்டை. கடந்த 1963 ஆம் ஆண்டு இந்த கோட்டையின் கட்டுமான பணி தொடங்கியது. புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால் இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் புனித ஜார்ஜ் கோட்டையை சென்று பார்க்க விரும்புவார்கள்.
ரிப்பன் கட்டிடம்:
சென்னையில் உள்ள மிகப் பழமையான கட்டிடம் தான் ரிப்பன் கட்டிடம். லோகநாத முதலியார் என்பவரால் அந்த காலத்தில் 7,50,000 செலவில் 1909 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் 1913 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த ரிப்பன் பிரபுவின் பெயர் இந்த கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஃபோர் கல்லறை:
இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவாக கடந்த 1952 ஆம் ஆண்டு 2.75 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் அமைக்கப்பட்டது தான் மெட்ராஸ் போர் கல்லறை. சென்னை நந்தனம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த கல்லறையில் இறந்தவர்களின் உடல் எதுவும் புதைக்கப்படாமல் அவர்களுடைய பெயர் அச்சடிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை சாந்தோம் தேவாலயம்:
சென்னையில் உள்ள மிகப்பெரிய தேவாலயமாக கருதப்படும் இது பதினாறாம் நூற்றாண்டில் போர் சுக்கியர்களால் கட்டப்பட்டது. இதில் சாந்தோம் என்ற சொல்லிற்கு புனித தோமா என்று பொருள்.
சென்னை உயர் நீதிமன்றம்:
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகம் சென்னை உயர்நீதிமன்றம் தான். இது விக்டோரியா பேரரசரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 10088 ஆம் ஆண்டு டபுள்யூ பிராசிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட 1892 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டன.
சென்னை அரசு அருங்காட்சியகம்:
சென்னை எழும்பூர் பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தொல்லியல், நாணயவியல்,சிற்பம் முதலியவற்றை உள்ளடக்கிய 46 காட்சிக்கூடங்கள் இந்த சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக கோடை விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் பெரும்பாலானோர் இங்கு வந்து செல்வார்கள்.
நேம்பியர் பாலம்:
சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் மெரினா கடற்கரையை இணைப்பதற்காக நேம்பியர் பாலம் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான பாலங்களில் ஒன்றாகும். பிரான்சிஸ் நேம் பியர் என்ற ஆளுநரால் 1869 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. 149 மீட்டர் நீளத்தில் ஆறு வளைவுகளுடன் மிக பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டது. இதற்கென ஒரு தனி சிறப்பே உள்ளது.
கன்னிமாரா பொது நூலகம்:
தேசிய நூலகங்களில் ஒன்றுதான் இது. ஏராளமான நூல்கள் மற்றும் இதழ்கள் இங்கு இருக்கின்றன.அது மட்டுமல்லாமல் கம்ப்யூட்டரில் இயங்கும் தொடுத்திறை வசதியும் இந்த நூலகத்தில் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை இந்த நூலகம் திறந்திருக்கும்.இங்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்பதால் தினம் தோறும் ஏராளமானோர் நூலகத்திற்கு சென்று வருவார்கள்.
விவேகானந்தர் இல்லம்:
முன்பு ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் சுவாமி விவேகானந்தர் நினைவாக விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்படுகிறது. இது 1842 முதல் 1874 ஆம் ஆண்டு வரை ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்கும் இடமாக விளங்கியது. ஆனால் தற்போது இங்கு விவேகானந்தர் தொடர்பான அரிய படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஹிந்தி தேசிய பூங்கா:
உலகிலேயே நகர் பகுதிக்குள் அமைந்திருக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா கிண்டி தேசிய பூங்கா தான். சென்னை நகரின் நுரையீரலாக கருதப்படும் மரங்கள் அடர்ந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் பல்வேறு மரங்கள் மற்றும் புள்ளி மான்கள் போன்ற அரிய விலங்கு மற்றும் பறவைகள் அனைத்தும் இருக்கின்றன. குழந்தைகளுடன் குடும்பத்தோடு சென்று கண்டு களிப்பதற்கு சிறந்த இடம்.
கபாலீஸ்வரர் கோவில்:
மயிலாப்பூரில் அமைந்துள்ள இந்த சிவன் கோவில் சிவபெருமான் மயில் வடிவில் பார்வதி தேவி வழிபட்டதால் இந்த பகுதி மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது.இங்கு தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஒரு சிறுவனை உயிர்பித்ததாகவும் புராணம் கூறுகின்றது.