Categories
அரசியல்

50 ஆண்டுகளுக்குப் பிறகு….. மூன்றாவது பெண் மேயராக பிரியா ராஜன்….. பெருமை….!!!!

சென்னை மாநகராட்சி உருவான வரலாறு பற்றியும் இதில் பெண்கள் குறித்த பங்கு பற்றியும் பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் 17ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த மிகப்பெரிய வர்த்தக மையம். நகரத்தின் வளர்ச்சி வரிவிதிப்பில் ஏற்பட்டு வந்த தகராறு உள்ளிட்ட காரணங்களால் புதிய நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உருவானது. அப்போதைய ஆளுநராக இருந்த ஜோசயா சைல்ட் சென்னை நகரத்தின் நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முயற்சி செய்தார். சென்னைக்கென தனி நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜேம்ஸிடம் வலியுறுத்தினார்.

1687 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி சென்னையில் மாநகராட்சியாக அறிவித்து அரசு பிரகனிடம் செய்தார். ஒரு மேயர் ஆல்டர்மெண் என்று அழைக்கப்படும் 12 கவுன்சிலர்கள், பர்செஸ் எனப்படும் பிரதிநிதிகள் உடன் 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி மன்றமும், மேயர் பதவியும் 1801 ஆம் ஆண்டு பல காரணங்களால் ஒழிக்கப்பட்டது. மீண்டும் 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றமும் தலைவர் பதவியும் உருவாக்கப்பட்டது. அப்போது 50 உறுப்பினர்கள் இருந்தனர்.

நீதிகட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த சார் பிட்டி தியாகராயர் மாநகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே மாநகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர். பழமையும், பெருமையும் ஒருசேர கலந்து வரலாற்றின் அடையாளமாக திகழ்ந்த சென்னை மாநகராட்சியில் ஆண்களே அதிகாரத்தில் இருந்தனர். 1933 ஆம் ஆண்டு ராஜா சர் முத்தையா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 48 நேயர்கள் சென்னை மாநகராட்சி நிர்வாகித்துள்ளனர். இதில் இரண்டு பெண்கள் மட்டுமே மேயராக இருந்துள்ளனர்.

முதல் நேராக தாரா சேரின் 1957ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரையிலும், 1971 முதல் 1972 ஆம் ஆண்டு வரை காமாட்சி ஜெயராமன் என்பவரும் நேராக இருந்துள்ளார். அதன் பிறகு பல ஆண்டுகள் அதாவது 50 ஆண்டுகளுக்குப் பிறகு 49 ஆவது மேயர் பதவியை மூன்றாவது முறையாக ஒரு பெண் அலங்கரிக்கிறார். 200 வார்டு உறுப்பினர்களில் 102 உறுப்பினர்கள் பெண் உறுப்பினர்கள். வரலாற்றுப் பழமை மிகுந்த சென்னை மாநகராட்சி மாமன்ற சபையை பெண்கள் பெரும்பான்மையாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.

தற்போது மூன்றாவது மேயராக இளம் பெண் பிரியா ராஜன் பதவியேற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் இவர்தான் என்பதும் பெருமைக்குரியது. 28 வயதான இவர் எம் காம் பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தியாவார். வடசென்னை சேர்ந்த இவர் மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |