Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது  தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டர்களையும் பேக்கேஜ் முறையில் விடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த  டென்டர்களை ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |