ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விமர்சனம் செய்து மத்திய அரசை உண்டு இல்லை என செய்து வருகின்றார் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர். மத்திய அரசு மீதான பிடிஆர் விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தக்க பதிலடி கொடுக்க தான் செய்கின்றார். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளை மிக முக்கிய பொறுப்பை வகித்து வரும் இரண்டு அமைச்சர்களுக்கு இடையேயான இந்த கருத்து மோதல் ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்பட்டாலும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து டார்கெட் செய்து வருவதனால் பிடிஆர் மீது அந்த கட்சியினருக்கு உள் அளவில் இருந்து வரும் கோபம் அண்மையில் செருப்பு வீச்சு சம்பவமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 13ஆம் தேதி மதுரை விமான நிலையம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் வீர மரணம் அடைந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு தமிழக அரசின் சார்பாக அமைச்சர் பி டி ஆர் மரியாதை செலுத்துவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பாஜகவினர் கூட்டமாக கூடியிருந்ததை கண்டு அரசு நிகழ்ச்சியில் ஏன் இவ்வளவு கூட்டம் என அமைச்சர் கேட்கவே ஆக்ரோஷமான பாஜகவினர் அவரது கார் மீது செருப்பை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்கள். மேலும் இந்த சம்பவங்களை காரணம் காட்டி மதுரை மாநகர பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து ஓவர் நைட்டில் விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.
தனது கார் மீது செருப்பு வீசப்பட்டதற்கு முதல்வர் தொடங்கி பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தாலும் தன்னால் அதனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியது அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் பிஜேபி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியாக வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் அழுத்தமாக சொன்னாராம். அமைச்சர் பேச்சில் இருந்த தீவிரத்தை உணர்ந்த திமுக நிர்வாகிகள் சரவணன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அதில் கட்சிக்காரங்க, அமைச்சர், முதல்வர் என எல்லாரும் உங்க மேல ரொம்ப கோவத்துல இருக்காங்க. அதனால நடந்த சம்பவத்திற்காக அமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவிச்சுட்டு போங்க என திமுக சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். இதன் விளைவாக அமைச்சர் பி டி ஆர் ரை, டாக்டர் சரவணன் அவரது இல்லத்தில் நள்ளிரவு சந்தித்து சாரி கேட்டாராம். அது கூடவே அவரது பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளாராம்.
இந்த நிலையில் நான் யார் என்று தெரிகிறதா என படாத குறையாக தன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு டாக்டர் சரவணன் மூலமே பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் பிடிஆர். என்கிட்ட வச்சுக்கிட்டா உங்க கட்சிக்காரங்கள தட்டி தூக்கிடுவோம் என வெளியிட்ட மெசேஜை பாஜகவிற்கு கூறியிருக்கிறது திமுக. ஆனால் கடந்த வருடம் தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தின் போது திமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து டாக்டர் சரவணனுக்கு உடனே எம் எல் ஏ சீட் கொடுத்து அழகு பார்ப்பது தாமரை கட்சி. அத்தகைய வரை இன்று ஒரு விரும்பத்தகாத சம்பவத்தால் தேவையில்லாமல் இழந்திருக்கிறது அந்த கட்சி. மேலும் இந்த சம்பவத்தை ஒரு பாடமாக கொண்டு இனியாவது பாஜகவினரை பொதுவெளியில் கண்ணியத்துடன் செயல்படுமாறு அண்ணாமலை தான் அறிவுறுத்த வேண்டும் இல்லை என்றால் டாக்டர் சரவணன் போல் பலரை அந்த கட்சி இழக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.