செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என சீமான் மட்டும் இல்லை, எல்லாரும் தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதனால் இது குறித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசுதான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், விருப்பு, வெறுப்பு, இல்லாமல் ஜாதிக்கு அனுப்பப்பட்ட கட்சி, மதத்திற்குப் அப்பாற்பட்ட கட்சி, இங்கு எல்லோருமே,
எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அம்மாவும் சரி, புரட்சித்தலைவர் காலத்திலும் சரி, அம்மாவிற்கு பிறகும் சரி, கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது, இது அவருக்கே தெரியாது. இன்று விமர்சனங்கள் செய்யலாம், இதே கட்சியில் இருந்தவர் தான் அவர். அதனால் இப்ப வந்து என்ன செய்தால் விமர்சனம் எடுபடுமென்று அதற்கு ஏற்றாற்போல விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார், நிச்சயமாக அவர் என்ன சொன்னாலும் எடுபட போவது கிடையாது.
நிதி அமைச்சர் மீது காலணி ஏய்ந்த விவகாரத்தில் இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது. இவரை பொறுத்தவரையில் தகுதி இருக்கா ? என்று கேட்டதும் தப்பு, அவர்கள் செருப்பை வீசுனதும் தப்பு. அதனால் இரண்டு பேரும் தவறு செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான் சொல்ல முடியும். அதிமுக ஆட்சி இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாஸ் போட்டியை சிறப்பாக செய்திருப்போம் என தெரிவித்தார்.