தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய சுங்கச்சாவடிகளில் மட்டும் ரூ 100 கட்டணம் தள்ளுபடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு பாஸ்டேக் (FASTag) முறையை கொண்டு வந்தது. அதன்படி வாகனத்தின் முன் பகுதியில் FASTag ஸ்டிக்கரை ஒட்டி விட்டால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சென்று கொண்டே இருக்கலாம். காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவே சுங்கச்சாவடிகள் மின்னணுமயமாக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டேக்கை அமேசான் மற்றும் எஸ்பிஐ, எச்டிப்சி மற்றும் ஐசிஐசிஐ, கோடக் மஹேந்திரா, அக்சஸ் ஆகிய வங்கிகளில் கணக்கை துவக்கி இணைய வழியாக பணத்தை செலுத்த முடியும். பலரும் இந்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சிலர் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் FASTag பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் பிப். 15 முதல் 29 ஆம் தேதி வரை 100 கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.