Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க ஆட்சியில் இல்லை…! செஸ் ஒலிம்பியாட்டை… வேற லெவெல்ல நடத்தி இருப்போம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக செய்திருப்போம், 1996-ல் ஷாப் கேம் நடந்தது, நானும் அமைச்சராக இருந்தேன். பிரம்மாண்டமான நேரு ஸ்டேடியத்தை 18 மாசத்தில் கட்டி முடித்தார்கள்.

வேளச்சேரியில் ஸ்விம்மிங் பூல், இண்டோர் ஸ்டேடியம், அவுட்டோர் ஸ்டேடியம் சென்னையை சுற்றி கட்டினார்கள், இது எல்லாம் அம்மா காலத்தில் உருவானது தான். அது மாதிரி ஆகபூர்வமாக சொத்துக்கள் உருவாக்கவில்லை, அவர்கள் குடும்பம் உட்கார்ந்து பார்ப்பதற்கும், திரு ஸ்டாலின் கோர்ட் போட்டு, முதல் நாள் வேட்டியில் வந்து போட்டோ ஷூட் நடத்தி,

பெரிய அளவிற்கு பிரம்மாண்டமான நேரு ஸ்டேடியத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து,  விளம்பரப்படுத்துகின்ற ஒரு விஷயமாகத்தான், அவர்கள் குடும்பத்தை விளம்பரப்படுத்துகின்ற விஷயமாகத்தான் பார்த்தார்களே ஒழிய..

அதனால் ஒரு என்ன சொத்து சென்னையில் செஸ் ஒலிம்பியாட்  நினைவாக செய்தார்களா? செஸ் போட்டி நடத்தியதை வைத்து ஆயிரம் கோடி ரூபாயில் பெரிய அளவிற்கு ஸ்டேடியம் ஏற்படுத்தினார்களா? சொத்துக்கள் எதையுமே உருவாக்கவில்லையே.  ஆனால் அன்றைக்கு சொத்துக்களை பொறுத்தவரையில், நாங்கள் சொல்ல முடியும்..

அன்றைக்கு சவுத் ஆசியன் பெடரேஷன் கேம் நடக்கும் போது, எந்த அளவிற்கு சென்னைக்கு அடிப்படை வசதிகளில் இருந்து, அதே போல பல சொத்துக்கள் உருவாக்கப்பட்டது எங்களால் தான்  சொல்ல முடியும். ஆனால் இப்போது இருக்கின்ற திமுக அரசாங்கத்தால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது என தெரிவித்தார்.

Categories

Tech |