Categories
தேசிய செய்திகள்

சேலம் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!!!

சேலம் மாவட்டத்தில் விவசாய பணிகள் முன்னேற்றம் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் கூறும் போது, தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து  அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். மேலும் சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 579.9 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது.

மாவட்டத்தில் 73 ஆயிரத்து 628.9 ஏக்கர் பரப்பில் நெல், சோளம், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் பயிறு வகைகள் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 240 மெட்ரிக் டன்னும் சிறுதானியங்கள், 96 மெட்ரிக் டன்னும் பயிர் வகைகள், 428 மெட்ரிக் டன்னும்  எண்ணெய் வித்துக்கள், 37 மெட்ரிக் டன்னும் பருத்தி 2 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தேவையான அளவிலான விதைகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் யூரியா, டிஏபி, பொட்டாஸ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களும் தேவையான அளவு கையிருப்பில் இருக்கின்றது.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் வாங்கும் விதைகளில் குறைபாடு கண்டறியப்பட்டால் ஆட்சியர் அலுவலக அறை எண் 402 இல் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |