சேலம் மாநகருக்குள் சைக்கோ கொலையாளி உலா வருவதாக காவல்துறையினர் தெரிவித்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டம் மாதம் தோறும் நடைபெறும். போன வருடம் மட்டும் பொதுமக்களிடமிருந்து 4432 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை சிறப்பாக நடைபெற்று பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.
அதில் 228 பேர் எங்களது மனுக்களை விசாரித்ததில் திருப்தி இல்லை என்று கூறினர். அவர்களையும் தனியாக அழைத்து விசாரித்ததில் அவர்களது மனுக்களின் பிரச்சினையையும் தீர்த்து வைக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது 90 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 70 மனுக்களுக்காண பிரச்சினைக்கு தீர்வு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை விரைவில் தீர்க்கப்படும் என்று மாநகர காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து சேலத்தில் நள்ளிரவில் மூன்று முதியவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து முக்கிய துப்பு கிடைத்துள்ளது. அதில், ஈடுபட்டது சைக்கோ வாலிபர் என்பது தெரியவந்துள்ளது. விரைவில் அவனை பிடித்து சிறையில் அடைப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சைக்கோ கொலையாளி சேலம் மாநகரத்தில் வலம் வருவதாக காவல்துறையினர் தெரிவித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.