அரக்கோணம் ரயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்று கொண்டிருந்தது. இதில் இரண்டு நபர்கள் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து தயாராக இருந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரயில் பெட்டிக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை ரயிலில் இருந்து இறக்கி அவர்களை சோதனையிட்ட போது அவரிடம் 55 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் ரயில்வே பாதுகாப்பு படையினர் போதை தடுப்பு பிரிவு காவல்துறை உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 55 கிலோ கஞ்சா போதை தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.