தனுசு ராசி அன்பர்களே..!
இன்று அவசரப்பணி உருவாகி உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.
சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற கூடுதலாக உழைப்பு தேவைப்படும், அப்போதுதான் நல்ல பலனை அனுபவிக்க முடியும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் போகும்போது நிதானம் தேவை. துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பதன் மூலம் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் இருக்கும். இன்று சக ஊழியர்களிடம் எந்தவித கருத்து வேற்றுமையும் வேண்டாம், பொறுமையாக அனுசரித்தால் போதுமானது.
எதிர்பாராத நிலையில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. திடீரென்று அவசர முடிவுகளை எடுக்க வேண்டியதிருக்கும், ஆனால் அலட்சியம் காட்டி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். இன்று போதுமானவரை பணத்தேவைக்காக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். என்று உடல் ஆரோக்கியம் சுமுகமாக இருக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு நிதானப் போக்கே வெளிப்படும்.
பிரச்சனைகள் இல்லாமல் சுமூகமாகவே செல்லும். இன்று மாணவ கண்மணிகளுக்கு வெற்றிகள் உண்டாகும், ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வந்தால் இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.