விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் திறமை வெளிப்படும்.
நண்பர்களின் புகழ்ச்சி வார்த்தையை பெரிதுபடுத்தாமல் நடந்துக்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற புதிய வழிகள் உருவாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோக மாற்றம் உண்டாகலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் அகலும். மனதில் ஓரளவிற்கு நிம்மதி பிறக்கும், இருந்தாலும் மாலை நேரங்களில் சிறிது நடைப்பயிற்சி மேற்கொண்டு உடலை வலுப்படுத்துங்கள். உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். காதலியே உள்ளவர்களுக்கு இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.
மனதில் இன்று அன்பு நிறைந்துக் காணப்படும். மாணவ மாணவிகளுக்கும் இன்று கல்வியில் பெரிதலவு முன்னேற்றம் இருக்கும். ஆர்வத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முக்கியமான வேலையில் நீங்கள் ஈடுபடும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும்.
பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும், அப்படியே அம்மன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீல மற்றும் பிங்க் நிறம்.