பாபநாசத்தில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் மீனா தம்பதியினர். அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வரும் நிலையில் இன்று திடீரென மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முழுதும் தீப்பற்றிக் கொண்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயினை அதிகம் பரவாமல் அணைக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ரூபாய் 15 ஆயிரம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாபநாசம் வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தீப்பற்றிய குடிசையை நேரில் பார்வையிட்டனர்.
Categories