சென்னை அருகே வீட்டு உரிமையாளர் வெளிநாடு பயணம் மேற்கொண்ட சமயத்தில் வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிந்த பெண் கள்ளச்சாவி தயார் செய்து ரூபாய் 20 லட்சம் மதிக்கத்தக்க தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் வசித்து வருபவர் கல்யாண்குமார். உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களில் தொழில் செய்து வரும் இவருக்கு பல்வேறு சொத்துக்கள் உண்டு. அந்த வகையில் கல்யாண்குமார் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த போது இவரது வீட்டில் வயதான பெற்றோர்கள் மட்டுமே இருந்தனர். அப்போது கள்ளச்சாவி போட்டு வீட்டில் பீரோவில் இருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கல்யாண்குமார் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரது வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரப் பெண்ணான ஷாலினி என்பவரை கைது செய்து விசாரிக்கையில் கள்ளச்சாவி போட்டு கொடுத்து திட்டம் போட்ட மற்றொரு வேலைக்கார பெண்ணான லோகநாயகியை கை காட்டினார். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அவர் திருச்செந்தூர் மணப்பாறை அருகே பதுங்கி இருப்பது தெரியவர அங்கே விரைந்து சென்ற காவல்துறையினர் லோகநாயகி உட்பட 4 பேரை கைது செய்து அவரிடம் இருந்த தங்க நகையை மீட்டனர்.