கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவிக் சந்திரன் (வயது 74). பிரபல எழுத்தாளர். இவர் மீது பெண் எழுத்தாளர் ஒருவர் கோழிக்கோடு போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். அதில் கோழிக்கோடு கடற்கரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தன்னிடம் சிவிக் சந்திரன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். இது தொடர்பாக கோழிக்கோடு போலீசார் சிவிக் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோழிக்கோடு கோர்ட்டு, சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கியது. இது தொடர்பான உத்தரவில், நிகழ்ச்சிக்கு வந்த புகார்தாரர் மிகவும் ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிந்து வந்துள்ளார். பெண்கள் ஆபாசமாக உடை அணிவது பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமையும், என்று நீதிபதி கூறியிருந்தார். இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவாலும் நீதிபதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார தெரிவித்துள்ளார்.