இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குள் பிரீமியம் கட்டாவிட்டால் எல்ஐசி பாலிசி காலாவதி ஆகிவிடும். எல்ஐசி பாலிசி காலாவதி ஆகிய பாலிசிகளை புதுப்பிக்க எல்ஐசி சூப்பர் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த வாய்ப்பை பாலிசிதாரர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.
அந்த வகையில் காலாவதியான பாலிசிகளை மீட்பதற்காக எல்.ஐ.சி நிறுவனம் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தவணை செலுத்தத் தவறிய தங்களது பாலிசிகளை அக். 21ஆம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தவணை செலுத்தப்படாத மாதங்களுக்கும் சேர்த்து கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும், நிபந்தனைகளுக்கு உட்பட்டே பாலிசிகள் புதுப்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.