நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவுக்காக கோவின் என்று அழைக்கப்படும் கோவிட் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளம் மத்திய சுகாதார அமைச்சகத்தால் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தளத்தை புதுப்பிக்க மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை உள்ளடக்கியதாக இது அமையும் என்றும் சோதனைய வீதியில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி தளம் செப்டம்பர் மாதம் மத்தியில் தொடங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக ரத்த தானம் மற்றும் உடலுறுப்பு தானம் பற்றிய சிறப்பு அம்சங்கள் அடுத்த கட்டங்களில் சேர்க்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.