Categories
சினிமா தமிழ் சினிமா

“உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்”…. கார்த்தி ட்விட்….!!!!!

விருமன் பட பாடல் ஒன்றை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி பகிருந்த பதிவு வைரலாகி வருகின்றது.

கார்த்தியின் விருமன்  திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக  வரவேற்பை பெற்று  இருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் வெளியான கொம்பன் படத்திற்கு பின் தற்போது ஆறு வருடங்கள் கழித்து விருமன் படத்தின் மூலம் கார்த்தி முத்தையா இருவரும் இணைந்திருக்கின்றார்கள். சுல்தான் பலத்திற்கு பிறகு வெளியாகும் கார்த்தி படம் என்ற  காரணத்தினால் விருமன்  படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்த படத்தில் ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பல நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே  இந்த படமும் கிராமத்து பின்னணியில் குடும்ப செண்டிமெண்ட் உடன் ஆக்சன் படமாக உருவாகி  இருக்கின்றது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விருமன்  படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இந்த சூழலில் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட்டிங் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வானம் கிடுக்கிடுங்க  வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை தற்போது கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, நடுராத்திரி மூணு மணிக்கு எல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர். மன்னிக்கவே மாட்டேன். இதற்கு முன்பாக இது போல் நான் செய்ததில்லை. இனி எல்லா ஊர் திருவிழாலையும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் என கூறியுள்ளார்.

Categories

Tech |