வெளிநாட்டு பயணத்தின் பொழுது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து இணையத்தில் நஸ்ரியா பகிர்ந்துள்ளார்.
நடிகை நஸ்ரியா மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து, டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அவரது குறும்பு தனமான நடிப்புகளாலும், கியூட் ரியாக்ஷ்னாலும் ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தார்.
தமிழில், ராஜா ராணி, நையாண்டி, நேரம், வாயை மூடிபேசவும் என குறைந்த படங்களையே அவர் நடித்திருக்கும் போதும் என்னென்றும் நஸ்ரியா ரசிகர்கள் என ஒரு பட்டாளத்தை தமிழ் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கினார்.
அவர் தன் காதலனான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். தன் திருமணத்திற்குப் பின் படங்களில் நடிப்பதை அவர் சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார்.
அவ்வப்போது சில மலையாளப் படங்களில் வந்து முகம் காட்டிவிட்டுச் சென்றார். இருந்தாலும் நஸ்ரியாவின் தமிழ் சினிமா கரியர் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டு மறந்த நிலையில் தற்போது அடடே சுந்தரா திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார்.
இப்படம் சென்ற ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகை நஸ்ரியா தாய்லாந்து பயணத்தின் போது தாய் ஏர்வேஸ் விமானத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். இது பற்றி அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளதாவது, தாய் ஏர்வேஸின் சேவை மிக மோசமாக இருந்தது. விமானத்தில் எனது பைகள் காணாமல் போனதால் உதவி கேட்டு பணியாளர்களை அழைக்கும் போது அவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இனிமேல் என் வாழ்க்கையில் அந்த விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன் என குறிப்பிட்டிருக்கின்றார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.