திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்திற்கான அங்க பிரதட்சண டோக்கன்கள் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அங்க பிரதட்சனை டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.