Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1 கிலோ வெறும் 1 ரூபாய் தான்…. அசத்தபோகும் தூத்துக்குடி மாநகராட்சி….. மகிழ்ச்சியில் மக்கள்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியிள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து எடுக்கப்பட்டு அதிலுள்ள மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு கிலோ உரம் ஆனது ஒரு ரூபாய்க்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற விவசாய பணிகளுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் இந்த உரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து முத்துரம் என்ற பெயரில் இந்த உரத்திற்கு லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லோகோவை மேயர் ஜெகன் பெரியசாமி அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டம் வந்து சுமார் ஆறு வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதனுடைய தரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |