Categories
உலக செய்திகள்

படைகளை திரும்பப் பெறாமல் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியாது…. உக்ரைன் அதிபர் தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யபடைகள் சென்ற பிப்ரவரி மாதம் தாக்குதலை துவங்கியது. தற்போதுவரை தொடர்ந்து வரும் இத்தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி இருக்கின்றனர். இருதரப்பிலும் மிகப் பெரிய அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டு உள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார். அவருடன் ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் படைகளை திரும்பப்பெறாமல் ரஷ்யாவுடன் எவ்வித அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என்று அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஷ்யா அமைதிக்கு தயாராக உள்ளதாக எர்டோகன் கூறியதை அடுத்துதான் மிகவும் ஆச்சரியமடைந்ததாக ஜெலென்ஸ்கி கூறினார். அத்துடன் முதலில் அவர்கள் எங்களது நாட்டை விட்டு வெளியேற வேண்டும், பிறகு பார்க்கலாம் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

Categories

Tech |