Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் கவனத்திற்கு…! கடைசி தேதி நீட்டிப்பு…. சீக்கிரமா முடிசிருங்க….!!!!

இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 விதம் வருடத்திற்கு 6000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் 11வது தவணை பெற்றுள்ள நிலையில் 12வது தவணைக்கான நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அடுத்த மாதத்தில் 12வது தவணை பணம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தொடர்ந்து பணம் பெறுவதற்கு eKYC முடிக்க வேண்டும். eKYC முடிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், PM கிசான் பயனாளிகள் இப்போது ஆகஸ்ட் 31 வரை தங்கள் eKYC ஐ முடிக்க முடியும் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது “அனைத்து PMKISAN பயனாளிகளுக்கும் eKYC இன் காலக்கெடு 31 ஆகஸ்ட் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று PM-Kisan Samman Nidhi அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |