ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கெம்பநாயக்கன் பாளையம் பகுதியில் பெரும்பள்ளம் அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை ஒட்டிய பகுதியில் அய்யனார் (43) என்பவருக்கு சொந்தமான விவசாயதோட்டம் இருக்கிறது. இங்கு உள்ள வீட்டில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இது சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. சென்ற சில தினங்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றையானை பெரும்பள்ளம் அணைப் பகுதியிலுள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வந்தது.
இந்நிலையில் அந்த யானை அய்யனாரின் தோட்டத்தில் நுழைந்தது. அதன்பின் அவர் வசித்துவந்த வீட்டின் மேற்கூரையான சிமெண்ட் சீட்டை துதிக்கையால் பிடித்து இழுத்தது. இதனால் சிமெண்ட் சீட் சேதமடைந்தது. இதைப் பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். சிறிதுநேர போராட்டத்திற்கு பின் யானை காட்டுக்குள் சென்றது